சிரியாவுக்கான அடுத்த
தலைவரை தெரிவு செய்வதை விட, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே எங்களுடைய
முதற்கடமை என கனடா அறிவித்துள்ளது.
சிரியாவுக்கான புதிய தலைவரை தேசிய கூட்டணியிலிருந்து தெரிவு செய்ய அமெரிக்கா
விரும்புகின்றது. மேலும் இனிவரும் தலைவர் அந்நாட்டின் அனைத்து இனத்தவரையும், மத தலைவரையும் ஆதரிக்கும் நல்லதொரு தலைவராக இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றது. கடந்த வாரம் மொரோக்கா நகரில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, தேசியக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை சிரியாவின் அடுத்த ஜனாதிபதியாக்க முடிவு செய்தனர். இதுகுறித்து கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு கூறுகையில், சிரியாவின் தலைவரை தீர்மானிப்பதில் பங்கேற்பதை விட அந்நாட்டில் அவதிப்படும் மக்களின் நலன்களை பாதுகாப்பதில் கனடா அதிக ஆர்வம் காட்டுகிறது என்றார். மேலும் சிரியாவின் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு, தங்களால் முடிந்தளவு உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார். குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 6.5 மில்லியன் டொலர் பணத்தை ஜோர்டானுக்கு கனடா அளித்துள்ளது. இதுதவிர சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு 10 மில்லியன் டொலர் தருவதாக அறிவித்துள்ளது. |
திங்கள், 17 டிசம்பர், 2012
சிரியா அகதிகளுக்கு உதவுவதே எங்கள் நோக்கம்: கனடா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக