siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

எரிபொருள் நிரப்ப பயணிகளிடம் பணம் வசூலித்த ஏர் பிரான்ஸ் நிறுவனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,விமானத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் நாட்டு விமான நிறுவனம் பயணிகளிடம் பணம் வசூலித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரத்தை நோக்கி, ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த 15ஆம் திகதி இரவு புறப்பட்டது.
விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால், இந்த விமானம் அவசரமாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் தரையிறங்கியது.
சிரியா மீது பிரான்ஸ் நாடு பொருளாதார தடை விதித்துள்ளதால் ஏர் பிரான்ஸ் நிறுவன கிரெடிட் கார்டு சிரியாவில் செல்லாது. மீண்டும் விமானம் புறப்பட வேண்டும் என்றால் எரிபொருள் நிரப்பியே ஆகவேண்டும்.
வேறு வழியில்லாததால் பயணிகளிடம் பணம் வசூலிக்க முடிவு செய்தனர் விமான ஊழியர்கள்.
உங்களிடம் உள்ள பணத்தை கொடுத்தால் தான் விமானம் புறப்படும் என்றதால், பயணிகளும் தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தனர்.
இந்த பணத்தை கொண்டு எரிபொருள் நிரப்பப்பட்டதும் விமானம் பெய்ரூட் நகருக்கு புறப்பட்டது. பயணிகளிடம் அவசரத்துக்கு பணம் வசூல் செய்ததற்காக, ஏர் பிரான்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்து உள்ளது