siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

வேலூர் சிறையிலிருந்த விடுதலைப் புலிகளை நான் தான் தப்பிக்க விட்டேன்: வைகோவின் அதிர்ச்சித் தகவல்

19.08.2012.
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே, அடுத்த சில நாட்களில் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் பொலிஸில் பிடிபடவில்லை.
இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையில் வைகோ உரையாற்றுகையில்,
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என தெரிவித்தார்.
சிறையில் இருந்து தப்பிய புலிகளை, இலங்கைக்கு தான் அனுப்பி வைத்ததாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே குற்றம் எனும் நிலையில், அவர்களை வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதும், அதை வெளிப்படையாக, வைகோ பெருமிதமாகத் தெரிவித்திருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது