சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.சுவிட்சர்லாந்தில் 1988 மற்றும்
1994ம் ஆண்டில் அந்நாட்டிற்கு.ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த ஒட்டோ ஸ்டிச் காலமாகி
உள்ளார்.
ஒட்டோ ஸ்டிச் சுவிஸ் அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினராகவும் நிதி அமைச்சராக
1983- 1995ம் ஆண்டு வரை இவர் பணியாற்றியுள்ளார். சுவிஸின் மத்திய இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான இவரது சாதனைகளில் முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்திலும், உலக வங்கியிலும் சுவிட்சர்லாந்து உறுப்பினராக 1992 இல் பதிவு செய்யப்பட்டு VAT எனப்படும் வரிச்சலுகையைப் பெற முடிந்ததைக் கூறலாம். இன்னொரு சாதனையாக எரிபொருள் மீதான வரி அதிகரிப்பில் சுவிட்சர்லாந்து வலிந்து ஈடுகட்ட முடிந்தமையையும் கூறலாம். நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியராகவும் அரசியல் ஞானியாகவும் விளங்கிய இவர், தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தது 1963 இல் டொனார்ச் நகர ஆளுநராகத் தெரிவு செய்யப் பட்டதிலிருந்து ஆகும். சுவிஸ் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் இவரைப் பற்றிக் கூறுகையில் ஒட்டோ ஸ்டிச் சற்று பிடிவாத குணம் மிக்க முரட்டுத்தனமானவர் என்ற போதும் மெல்லிய இதயம் உடையவர் என்று கூறியுள்ளார் |
சனி, 15 செப்டம்பர், 2012
சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒட்டோ ஸ்டிச் மரணம்
சனி, செப்டம்பர் 15, 2012
தகவல்கள்