சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.ஆப்கானிஸ்தானில் பயணிகள்
பேருந்து, எண்ணெய் தாங்கி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர்
பலியானதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கான்ஸி மாகாணத்திலிலுள்ள அப்பான்ட் மாவட்டத்தில் காபூல்- கந்தஹாருக்கான
நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் பேருந்தும் எண்ணெய் தாங்கி வாகனமும் தீப்பற்றி எரிந்துள்ளன. இதில் பேருந்தில் 56 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகனங்களிலிருந்து எரிந்து கருகிய சடலங்களை மீட்கும் பணியில் ஆப்கான் பொலிஸாரும் படைவீரர்களும் ஈடுபட்டுள்ளனர். பலரது சடலங்கள் அடையாளங்காண முடியாத வகையில் எரிந்து கருகியுள்ளதாக மாகாண பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் ஸரவார் ஸாஹித் தெரிவித்தார் |
சனி, 15 செப்டம்பர், 2012
எண்ணெய் தாங்கி வாகனத்துடன் பேருந்து மோதி பயங்கர விபத்து: 56 பேர் பலி
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி