Saturday, 15 September 2012,By.Rajah. எண்பதுகளின் வெள்ளிவிழா கதாநாயகன் மைக் புகழ் மோகன், மீண்டும் கொலிவுட்டில் வலம்வர இருக்கிறார். |
இளையராஜாவின் இசைத் துணையுடன் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிப் படங்கள்
மோகனுக்கு அமைந்தன. பல படங்களில் அவர் மைக்கும் கையுமாக வந்து பாடுவார். இதனால் அவர "மைக் மோகன்" என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அவர் கடைசியாக நடித்தது சுட்டபழம். தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகள், குணசித்திர கதாபாத்திரங்கள் என எவ்வளவோ வந்தும் அவற்றை ஏற்கவில்லை. கதாநாயகனாகத் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் மணிரத்னத்தின் பட வாய்ப்பைக் கூட மறுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மோகன். ஆனால் இந்தமுறை வில்லனாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இப்படத்தினை இயக்க இருக்கிறார். |
சனி, 15 செப்டம்பர், 2012
மீண்டும் கலக்க வருகிறார் மோகன்
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்