Saturday, 15 September 2012, By.Rajah.யுத்தம் செய் படத்தில் நடித்ததற்காக மிகவும் வருத்தப்பட்டதாக கொலிவுட்டின் சிறந்த பாடகர்களில் ஒருவரான மாணிக்க விநாயகம் நம்மிடம் தெரிவித்தார். |
கொலிவுட்டில் 1980ம் ஆண்டில் இசையமைப்பாளராக அறிமுகமான மாணிக்க விநாயகம், 15000
பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இருப்பினும் 2001ம் ஆண்டு சியான் விக்ரம் நடித்த தில் படத்தில் "கண்ணுக்குள்ளே கெலுத்தி" என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக வலம் வர தொடங்கினார். சமீபத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் நானே இந்திரன் நானே சந்திரன் போன்ற பல பாடல்களை பாடிய மாணிக்க விநாயகம், யுத்தம் செய் படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக அதிகமான பாராட்டுக்கள் வந்தாலும் தன்னுடைய கௌரவமான மதிப்பை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த கதாப்பாத்திரம் அமைந்ததாக நம் ஊடகப்பேட்டியில் தெரிவித்தார். அதனால் தற்போது எந்த விதமான படங்களில் நடிக்க விருப்பமில்லாமல் இருப்பதாகவும் ஒரு வேளை நல்ல கதாப்பாத்திரம் கிடைக்கும் பட்சத்தில் நடிக்க விரும்புவதாகவும் பாடகர் மாணிக்க விநாயகம் பேசினார் |
சனி, 15 செப்டம்பர், 2012
யுத்தம் செய் படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன்: மாணிக்க விநாயகம்
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்