siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 செப்டம்பர், 2012

கடலில் விழுந்த அசின் தோழி

Saturday, 15 September 2012,By.Rajah.காவலன் திரைப்படத்தில் நாயகி அசின் தோழியாக நடித்த மித்ரா குரியன், தற்போது நந்தனம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் நடிக்கிறார்.
திரைப்பட கல்லூரி மாணவர் ஷியாமளன் இயக்குகிறார்.
அண்மையில் இப்படத்தின் 'காதல் நதிக் கரையோரம்' என்ற பாடல், கேரளாவின் ஆலப்புழையில் உள்ள பேக்வாட்டர் பகுதியில் படமாக்கப்பட்டது.
டூயட் பாடல் என்பதால் சிவாஜி தேவும், மித்ரா குரியனும் தனியாக ஒரு படகில் சென்றுள்ளனர்.
இதனை மற்றொரு படகில் இருந்த இயக்குனர் ஷியாமளன் அடங்கிய படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.
அப்போது எதிர் திசையில் வந்த ராட்சத படகு ஒன்று நாயகன், நாயகி இருந்த படகை உரசிச் சென்றது. இதில் நிலை தடுமாறிய நாயகி கடலுக்குள் விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உதவி கேட்டு கூச்சல் இட்டுள்ளனர். உடனே அங்கிருந்த மீனவர்கள் நீரில் விழுந்த மித்ராவை காப்பாற்றியுள்ளனர்