Saturday, 15 September 2012.By.Rajah தெலுங்கில் தயாராகி, தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் படங்களில் புதிய சாதனையைச் செய்திருக்கிறது நான் ஈ. |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 50 நாட்களில் தமிழில் மட்டும் 24.5
கோடியை ஈட்டியுள்ளது. ஏற்கனவே அனுஷ்கா நடித்த அருந்ததி தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். அப்படம் 6.5 கோடி வசூலித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. தமிழகமெங்கும் நான் ஈ படத்தை 221 தியேட்டர்களில் திரையிட்டனர். இதில் 72 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடியுள்ளது. சென்னையில் ரூ. 4 கோடியும், கோவையில் ரூ. 4.5 கோடியும், செங்கல்பட்டு ஏரியாவில் ரு. 4.5 கோடியும் வசூலித்துள்ளதாம். தமிழில் வெளியாகி, அதன் தெலுங்கு டப்பிங்கில் அதிக தொகையை சம்பாதித்த ஒரே படம் ரஜினியின் எந்திரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது |
சனி, 15 செப்டம்பர், 2012
புதிய சாதனையை நிகழ்த்திய நான் ஈ
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்