siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 11 ஜூன், 2014

ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது

ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது அமெரிக்க அரசு
உலகெங்கும் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்களை அழிக்க அமெரிக்க அரசு ஆளில்லா விமானங்களை இதுநாள் வரை செயல்படுத்திவந்துள்ளது. இப்போது முதன்முறையாக இந்த வகை விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பன்னாட்டு ஆற்றல் சக்தி நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கும், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏரோவிரோன்மென்ட்டுக்கும் அலாஸ்கா மாகாணத்தில் வான்வழி ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஏரோவிரோன்மென்ட் நிறுவனம் கடந்த 8ஆம் தேதியன்று பிபி நிறுவனத்திற்கான ஆய்வுகளை முதன்முதலாக மேற்கொண்டது. அலாஸ்காவில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் வயலான புரூதோ பேயில் உள்ள உபகரணங்கள், சாலை வழிகள் மற்றும் எண்ணெய்க்குழாய்களை இந்த விமானங்கள் ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுகள் ஆளில்லா விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கான முக்கிய மைல்கல்லாகும். மாறிவரும் தொழில்நுட்பத்தினால் இத்தகைய விமானங்களின் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்று போக்குவரத்து செயலர் அந்தோணி பாக்ஸ் குறிப்பிட்டார். இந்த விமானப் பயன்பாடுகளின் மூலம் தங்களுடைய உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை எளிதாக நிர்வகிக்கக்கூடும் என்று பெட்ரோலிய நிறுவனம் கருதுகின்றது. இதன்மூலம் நேர விரயம் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பு ஆதரவு அதிகரிப்பதுடன் நுணுக்கமான வடக்குப்புற சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக