siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 19 ஜூன், 2014

பிரிட்டனில் அமலுக்கு வந்தது புதிய சட்டம்!

கட்டாய திருமணத்திற்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, பிரிட்டன் அரசு சட்டம் இயற்றி உள்ளது. பிரிட்டனில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் வாரிசுகளின் திருமணத்தை, வாரிசுகளின் ஒப்புதல் இன்றி, தாங்களாகவே முடிவு செய்து, திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்காக, தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்று, கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர்.
   அத்தகையோர், பின், பிரிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்வது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, 'கட்டாய திருமணம் செய்து கொண்டால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்; திருமணத்திற்கு நிர்பந்திக்கும் பெற்றோர், உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவர்' என, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு, புதிய சட்டம் பிறப்பித்து உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக