மெக்சிகோவில் ஜனாதிபதி
பதவியேற்பு நிகழ்ச்சியின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டம்
நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை மெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக என்ரிக் பெனா நெய்டோ
பதவியேற்று கொண்டார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “யோ சோய் 132” எனப்படும் மாணவர்கள் இயக்கம் போராட்டம் நடத்தியது. அப்போது பொலிசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
செவ்வாய், 4 டிசம்பர், 2012
மெக்சிகோவில் புதிய ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக