சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில்
உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர்
அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது. சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன் ஒருவர் தரையில் விழுந்துகிடந்தார். அவரைப் பிழைக்க வைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கொலை செய்ததாகக் கருதப்படும் இளைஞரைக் காவலர் கைது செய்தனர். புகலிட மையத்தில் இருப்பவர்கள் மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாகத் தெரிவித்தனர். தற்போது காவல்துறையும், விசாரணை அதிகாரிகளும் இக்கொலை பற்றிய புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர் |
செவ்வாய், 4 டிசம்பர், 2012
புகலிடம் தேடி வந்த டுனீஷிய இளைஞர் சுட்டுக்கொலை ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக