siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

18 வயசு – பதறுது மனசு! -திரை விமர்சனம்!

BY.rajah.27.08.2012.நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் ’ரேனிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஜானி நடித்து வெளிவந்துள்ள படம் ‘18 வயசு’. ரேனிகுண்டா படம் தெலுங்கிலும், தமிழிலும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு
இருந்தது.
ஒரு மலைக்கிராமத்தில் வசித்து வரும் சாதாரணக் குடும்பத்தில் தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டு வளர்கிறான் கதாநாயகன். மகன் தந்தையிடம் மட்டும் பாசத்துடன் இருப்பது தாய்க்கு பிடிக்காததால் கதாநாயகனின் குழந்தைப்பருவம் பெற்றோர்களின் சண்டையிலேயே வளர்கிறது.
கதாநாயகனின் அம்மா வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் அப்பாவும், மகனும்.
தனது மனைவியா இப்படி என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத கதாநாயகனின் தந்தை தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதையும் நேரில் பார்த்துவிடும் கதாநாயகனை கிடைக்கும் தனிமையும், கிடைக்காத தாய்ப்பாசமும் ஒரு சைக்கோவாக மாற்றிவிடுகின்றன். சிறிய வயதில் எதுவும் தெரியாவிட்டாலும் வளர வளர கதாநாயகனுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது நன்கு தெரியவருகிறது. மன அழுத்தத்தினால் உண்டாகும் இந்த நோயினால் எந்த மிருகத்தை பார்த்தாலும் அந்த மிருகத்தைப் போலவே வெறித்தனமாக மாறிவிடும் கதாநாயகன் நகரத்திற்கு வந்ததும் படத்தின் கதாநாயகியான புதுமுக நடிகை காயத்ரியைப் பார்க்கிறான்.
கதாநாயகியும் தன்னைப்போல பெற்றோர் இல்லாமல் அனாதையாகவும், பாசத்திற்கு ஏங்கியும் உறவுக்காரர்கள் வீட்டில் வளர்ந்தது தெரியவர நண்பனாக அறிமுகமாகி பின்பு காதல் வயப்படுகிறான் கதாநாயகன். தன் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர் “ என்னை சித்தப்பா என்று அழைக்கப் பழகிக்கொள். இனி நான் இங்கு தான் இருப்பேன்” என்று கூறி சித்ரவதை செய்ய, தன்நிலை இழக்கும் கதாநாயகனுக்கும் அவருக்குமிடையே நிகழும் சண்டையில் குறுக்கே வரும் தனது அம்மாவை கொலை செய்கிறான் ஜானி.
கொலைகாரனாகிய தன்னை வலைவீசித் தேடும் போலீஸிடமிருந்து தப்பித்து கதாநாயகியிடம் செல்லும் போது ’அம்மாவையே கொலை செய்துவிட்டான்’ என அவனை கதாநாயகி ஒதுக்கிவிடுகிறாள். சிறு வயதில் தன் தந்தை சொன்ன கதைகள் நினைவிற்கு வந்து கதாநாயகியை
ஒரு மலையடிவாரத்திற்கு கடத்திச் செல்லும் கதாநாயகனை, போலீஸ் விடாது துரத்தி வர மருத்துவராக வரும் நடிகை ரோகிணி அவன் குற்றவாளி இல்லை நோயாளி என காவல் துறைக்கு கதாநாயகனின் நிலையை புரியவைக்க முயற்சி செய்கிறார்.
காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? கதாநாயகன் குணமடைந்தானா? இது போன்ற சூழ்நிலையில் காவல்துறையின் நடவடிக்கை எந்த விதத்தில் இருந்தது? என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.படத்தின் முதல் பாதியை காமெடியாக கொண்டு சென்றிருக்கின்றனர். ஹீரோவுக்கு மனநிலை சரியில்லாத நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் குழந்தைத் தனமான பேச்சை தவிர்த்திருக்கலாம். கதாநாயகி நல்ல நடிப்பு. கதாநாயகியை அடுத்து அதிக படங்களில் பார்க்கலாம். தேவையான அளவு இசை, பிரம்மிப்பான சண்டைக் காட்சிகள் என அனைத்தும் பொருத்தம். கதாநாயகனின் நண்பனான ஜாக்கியும், நாம் பார்க்காத சென்னையும் இயக்குனரின் திறமை.