
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அனைத்து பரிமாணங்களிலும் வெற்றிகளை குவித்தவர் சசிகுமார்.
போராளி படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன்.
இப்படத்தை அவரது உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க, சசிகுமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பாடலில் அவரை ரஜினி ரசிகராக சித்தரித்து ஒரு பாடல் வந்துள்ளது.
அதற்கு அவர் பதிலளிக்கும் போது, ஆமாம். இப்படத்தில் நான் ரசிகராக நடிக்கிறேன். பாடல் காட்சியிலும் அது தெரியும்.
இது வேண்டுமென்றே திணிக்கப்பட்டதில்லை. என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் ரஜினி மற்றும் கமலின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்