நேற்று நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாக்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பரீட்சை நடைபெறுவதற்கு முன்தினம் இரவும், பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு வினாக்கள் வெளியாகியுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளா மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பொல்கஹாவெல, ரம்புக்கன போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெற்றோருக்கு இவ்வாறு வினாக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பரீட்சையின் முதலாம் பாகம் நடைபெற்றதன் பின்னரான இடைவேளையில் இரண்டாம் பாகத்திற்கான கேள்விகள் மாணவ மாணவியருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
கந்தளாய், கம்பஹா, ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு பரீட்சை வினாக்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளன.
ஒரு தரப்பினர் பரீட்சை வினாக்களை முன்கூட்டியே பெற்றோருக்கு வழங்கியுள்ளதாக இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்