siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு  
 By rajah.27.08.2012.
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பை விருத்திசெய்யவும் இராணுவ முகாம்களுக்கு தேவையான விடுதி மற்றும் வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கவும் சீனா முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கையுடனான பொருளாதாரம்,வர்த்தம் மற்றும் இராணுவ உறவுகளையும் சீனா மேம்படுத்திக் கொள்ளவிருக்கின்றது.
இராணுவ நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கவிருக்கின்றது. அதுமட்டுமன்றி படை அதிகாரிகளின் பிள்ளைகள் கல்வி பயிலும் கொழும்பு பாதுகாப்புக் கல்லூரிக்கு உதவியளிக்கவிருக்கின்றது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கு ,கிழக்கில் இராணுவத்தைக் குறைக்குமாறு மேற்குலக நாடுகள் சிலவும் இந்தியாவும் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே சீனா இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றது.
வடக்கில் மன்னார்,பளை,ஆனையிறவு,பூநகரி,தாவடி,காரைநகர் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் உள்நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 1950 ஆம் ஆண்டில் முகாம்கள் நிறுவப்பட்டன. அவ்வாறான முகாம்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும் ௭ன்பதுடன் விடுதி வசதிகளும் மேம்படுத்த வேண்டும் ௭ன்று பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை சீனப்பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி ௭திர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் பாதுகாப்பு அமைச்சருடன் சீன பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் வருகை தரவுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி 2002 தொடக்கம் 2007 வரை சீன இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும், பின்னர் சீன மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
ஜெனரல் லியாங் குவாங்லி இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப் புத் துறைசார் அதிகாரிகளையும், ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவையும் சந்தித்து இருதரப்பு  ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள் வது தொ டர்பில் பேச்சுவார்த்தை நடத்தவு ள் ளா ர் . கொழும்பிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு சீனா 198 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கவிருப்பதுடன். அரசாங்கம் 13.8 மில்லின் ரூபா செலவில் ௭ம்.ஏ–60 ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக சீனாவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்