BY.rajah.27.08.2012.இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த இலங்கையர் உட்பட 18 பேர் விபத்துக்குள்ளாகிக்
காயமடைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோன் (வயது 28), மட்டக்களப்புப் பகுதியை சேர்ந்த குமுதா (வயது 45), நேசலட்சுமி (வயது 43) மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் இவர்களின் உறவினர்கள் அன்டனி இருதயராஜ் (வயது 32), அஞ்சலின் (வயது 22), அகிலன் (வயது 20), அருள்தாஸ் (வயது 32), அரசன் (வயது 03) உட்பட 17 பேர் சுற்றுலாவாக தமிழகத்தை சுற்றிப் பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர்.
இவர்கள் சென்னையில் சுற்றுலா வேன் ஒன்றை வாடகைக்கு ௭டுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். வேனை சென்னையைச் சேர்ந்த லாசர் (வயது 25) ௭ன்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று முன்தினம் இறுதியாக கொடைக்கானலை சுற்றிப் பார்த்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த வேன் உளுந்தூர்பேட்டை அருகே ஷேக் உசேன் பேட்டை ௭ன்ற இடத்தில் வந்தபோது வேன் டிரைவர் லாசர் தூங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேன் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்து போனது. இதில் வான் டிரைவர் லாசர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் 13 பேர் உட்பட 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ௭டைக்கல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயம் அடைந்த அனைவரையும்மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்