ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்து மூடப்பட்டது. இப்போதும் எச்சரிக்கைக் குறியீட்டின் நான்காவது தர நிலையான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதால் இதுபோன்றதொரு பாதிப்பு நிகழக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
தலைநகர் ரெய்க்ஜவிக்கிலிருந்து 300கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் மனிதக் குடியிருப்புகள் அதிகம் இல்லாதபோதும் அங்குள்ள தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாகக் காணப்படும். எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்தப் பூங்காவிற்கு வருபவர்களைத் தடை செய்து பூங்காவையும் மூடியுள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று வரை இந்த எரிமலை அமைதியாகக் காணப்பட்டபோதிலும், இது வெடிக்கத் தொடங்குமேயானால் அட்லாண்டிக் வான் போக்குவரத்து இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .
0 comments:
கருத்துரையிடுக