siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 26 ஜூலை, 2012

செட்டிநாட்டுச் காபூலி புலாவ்

 

 

வெள்ளை சென்னா - 1 கப்,
பாசுமதி அரிசி - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பூண்டு - 2 பல்,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
துருவிய சீஸ் - அலங்கரிக்க.
சென்னாவை முதல் நாள் இரவே நன்றாக ஊற வைக்கவும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரை வடிகட்டி, புதுத் தண்ணீர் விட்டு, சிறிது உப்புச் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, 2 கப் தண்ணீரில், சிறிது உப்புச் சேர்த்து, பொலபொலவென வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, பூண்டு, வெங்காயத்தை வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கி, மிளகுத் தூள் சேர்க்கவும். அதில் வேக வைத்த சென்னா சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த பாசுமதி அரிசியையும் சேர்த்துக் கிளறவும். துருவிய சீஸை மேலே தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

0 comments:

கருத்துரையிடுக