siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 26 ஜூலை, 2012

பெண்ணை கற்பழிக்க முயற்சி : இந்திய வனத்துறை அதிகாரி அமெரிக்காவில் கைது

 

 


பென்சில்வேனியா: பென்சில்வேனியாவில் உள்ள ஹோட்டலில் இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வந்த புகாரின் பேரில், இந்திய வனத்துறை அதிகாரி சுரேந்தர் மகாபத்ரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வனத்துறை அதிகாரி சுரேந்தர் மகாபத்ரா உட்பட 34 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் பயிற்சிக்காக அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பல்கலைகழகம் ஒன்றிற்கு சென்று இருந்தனர்.

இந்நிலையில், அதிகாரிகள் அனைவரும் பென்சில்வேனியாவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். மகாபத்ராவின் லேட் டாப் வேலை செய்யாததால், உதவிக்கு வந்த பெண்ணிடம் அவர் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அமெரிக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மகாபத்ராவின் பாஸ்போர்ட்டை கைப்பற்றி, அவரையும் கைது செய்துள்ளனர். மற்ற அதிகாரிகள் தங்கள் பயிற்சியைத் தொடர வாஷிங்டனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக