25.07.2012
நண்பர்களே ! . மகர சிறையில் அடித்து கொல்லபட்ட எங்கள் உறவு நிமலரூபன் கடந்த இரு வாரங்களாக பிண அறையிலும் பத்திரிகையிலும் கிடந்த நிமலரூபன் இன்று மாப்பிள்ளை கோலத்துடன் தன் சொந்த மண் முற்றத்தில் சிறையில் சிங்களவர்களால் கொல்லப்பட்ட நிமரூபனின் உடலை எங்கோ புதிது விட்டுவதற்கு கொலையாளிகள் போட்ட திட்டம் அம்மாவின் அப்பாவின் விடாபிடியால் தோற்று போனது நிமலரூபனின் மரணம் சொல்லும் சேதி மிக சாதாரணமானது அவர்கள் அவர்கள்தான் நாங்கள் நாங்கள்தான் ? நிமரூபனின் அம்மா கதறுவதுபோல இருபத்தேழு வயதில் திருமண கோலம் காணவேண்டிய அந்த வாலிபன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லபட்டான் . சொன்னால் மனம் கனத்து போவீர்கள் நிமலரூபன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு பிள்ளை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அம்மாவின் கனவாக அவன் பிறந்தானாம் ஒரே ஒரு வாரிசு பிரிந்துபோனது அம்மாவின் ஏக்கத்தை குரலை எப்படி வடிப்பது இனி அவர்களுக்கு அவன் நினைவாக என்ன உண்டு ஒரே ஒரு பிள்ளை இந்த மண்ணுக்காய் போயமுடிந்தானா ! அவன் மீது கொலைவெறி நடத்தியவர்களுக்கு நிமலரூபன் ஒரே ஒரு பிள்ளை என்பது தெரியுமா கடவுளே ! அம்மாவின் அழுகையில் இன்று எல்லோரும் உடைந்து போனார்கள் அங்கு சென்ற யாருக்குமே அஞ்சலிகூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை அம்மா குமுறினாள் அது மனசாட்சிகளை குத்தியது அவள் கேட்டால் என் பிள்ளையை அடிக்க யார் அனுமதி தந்தது கட்டிபோட்டு அடிப்பதெல்லாம் வீரமா! என் கண்முன்னே என் மகனை கொலை செய்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும் அவனை பெற்ற என் கைகால்கள் பற்றி ! கைகால்களை கட்டாமல் தொட்டிருந்தால் தெரிந்திருக்கும் என்மகனை பற்றி ! இந்த நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு உண்மையான புரிதல் வேண்டும் இல்லையெனில் அங்கேயும் அழுகுரல்கள் கேட்கலாம் . அப்பாவி தமிழ் சிங்கள இளம் சந்ததி பாவம். தாம் பெற்ற ஒரே ஒரு பிள்ளை பற்றி எத்தனை கனவு இருந்திருக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் |
. |
0 comments:
கருத்துரையிடுக