பார்முலா1 கார்பந்தயத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவர் மைக்கேல் ஷுமாக்கர்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.
தற்போது பிரான்சில் உள்ள கிரனோபில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது உடல்நிலை குறித்த தகவல்களை சேகரிக்க தினமும் ஏராளமான செய்தியாளர்கள் அங்கு குவிகிறார்கள்.
அவர்களுக்கு ஷுமாக்கரின் மனைவி கோரினா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், ஷுமாக்கரை காப்பாற்ற போராடும் எங்களுடன் உங்களின் ஆதரவை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நெருக்கடி இன்றி இருந்தால் தான் அவர்கள் தங்களது பணியை இயல்பாக செய்ய முடியும். எனவே நீங்கள் (ஊடகத்தினர்) இந்த அறிக்கை மீது நம்பிக்கை வைத்து, மருத்துவமனை பகுதியில் கூடுவதை கைவிட்டு வெளியேற வேண்டும். அது மட்டுமின்றி எங்களது குடும்பத்தினர் அமைதியுடன் இருக்க தனிமையில் விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக