siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஜனவரி, 2014

துருக்கிய 350 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

துருக்கிய அரசாங்கத்துடன் நெருக்கமானவர்களின் ஊழல்  விசாரணைகளை தொடர்ந்து,  தலைநகர் அங்காராவிலுள்ள 350 பொலிஸ் உத்தியோகத்தர்களை துருக்கி பணிநீக்கம் செய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிநீக்கப்பட்டுள்ளனர் அல்லது இராஜினாமாச் செய்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி சோதனையின்போது தங்களது மகன்கள் தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து 03 அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமாச் செய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரினதும் நீதித்துறையினரதும் கறைபடிந்த சதியென பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், கடந்த டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி தடுத்துவைக்கப்பட்டோரில் பிரதமருக்கு நெருக்கமான

 அரசாங்க அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் அடங்கியிருந்ததாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன

0 comments:

கருத்துரையிடுக