siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

"மோசடியான கேலிக்கூத்து" வன்முறைகளுக்கு மத்தியில்

எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் தேர்தல் கடும் வன்முறைகளுக்கு இடையே நடந்து வருகிறது.
வங்கதேசத்தில் இன்று நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் இத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், தொண்டர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் யாரும் போட்டியிடாததால், ஆளும் கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவில்லை.
உள்ளுர் நேரப்படி காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடக்கிறது.
எதிர்க்கட்சியான, பங்களாதேஷ் தேசியக் கட்சி, சனிக்கிழமையிலிருந்து இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்திருக்கிறது.
தேர்தல்களை ஒரு "மோசடியான கேலிக்கூத்து" என்று எதிர்க்கட்சித் தலைவி கலீதா ஸியா வர்ணித்துள்ளார்.
தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார், ஆனால் இதனை அரசு மறுத்துள்ளது.
இதற்கு முன்னரும் பல நாட்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

0 comments:

கருத்துரையிடுக