siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 15 நவம்பர், 2012

ஊடகங்களுக்குள்ளும் புலிகள் - சிறீலங்கா அரசாங்கம் !


15.11.2012.By.Rajah.புலிகளின் தளபதி கேணல் பரிதி அவர்களைக் கொலைசெய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பிரான்சில் இரண்டு இலங்கையர்கள் கைதாகியுள்ளனர் என்பது யாவரும் அறிந்தவிடையம். ஆனால் இவர்களில் ஒருவர் தாம் இலங்கை அரசிடம் 50,000 யூரோக்களைப் பெற்று, இக் கொலையை செய்ததாக ஒப்புதல் வாகுமூலம் அளித்துள்ளார் என பிரான்சில் இருந்து வெளியாகும் ஊடகம் தெரிவித்துள்ளது.
இச் செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கை அரசு ஆடிப்போயுள்ளது. இலங்கை அரசுக்கும் இக் கொலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பிரான்ஸ் பொலிசார் கடுமையாக வீசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

இந் நிலையில், பிரான்ஸ் ஊடகங்களுக்குள்ளும் புலிகள் ஊடுருவிட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் தான் இதுபோன்ற செய்திகளை பிரெஞ்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவதாக அது மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இனவாத ஊடகமான த ஐலண்ட் நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரமுகர் ஒருவர், பிரெஞ்சு ஊடகங்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி அழுத்தங்களை பிரயோகித்து வருவதன் காரணமாகவே தமது முகவர்கள் மீது பரிதியின் படுகொலைக்கான பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பரிதியின் கொலையுடன் தமது முகவர்களை தொடர்புபடுத்தி பிரெஞ்சு ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் குறித்து பிரெஞ்சு அரசாங்கத்துடன் பாரிசிலுள்ள தமது தூதரகத்தினர் பேச்சுக்களை நிகழ்த்தியிருப்பதாகவும் த ஐலண்ட் நாளேட்டிற்கு சம்பந்தப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரமுகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக