siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 26 செப்டம்பர், 2012

டுபாயில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் மீது தாக்குதல்!

 
 
26.09.2012.By.Rajah.டுபாயில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் அவர்களின் குடும்ப நண்பரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தம்பதியர் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்து சென்ற தமது கணவரை பிறிதொருவர் தாக்குவதை தாம் கண்டதாக இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் குடும்ப நண்பராக கருதப்படும் சந்தேகத்திற்குரியவர் தம்மையும் தாக்குவதற்கு துரத்தியதாகவும், ஆடையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தமது கழுத்தில் கீறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரால் தமது கணவர் தலையிலும், கைகளில் கடுமையாக தாக்கப்பட்டு கிடந்ததாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து பெண் அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதியில் ஓடிய போதும் சந்தேகத்திற்குரியவர் அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்றுள்ளார்.
அந்த வீதியில் வந்த பொது மகன் தாக்க வந்தவரை தடுத்து நிறுத்திய போது பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்து சந்தேககத்துக்குரிய குடும்ப நண்பரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இலங்கை தம்பதியர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த தம்பதியர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் டுபாய்க்கு சென்று தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் மற்றைய பகுதியில் தங்குவதற்கு பிறிதொரு தரப்பினர் கோரியிருந்தனர்.
எனினும், குறித்த தம்பதியர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, நேற்று மதுபோதையில் வந்த இருவர் தமது கணவரை அச்சுறுத்திவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.
அதனையடுத்தே தாம் உறங்க சென்ற பின்னர் சந்தேகத்திற்குரிய ஒருவர் வீட்டு கதவை உடைத்து தம்மை தாக்கியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வர்த்தகத் தொகுதியொன்றுக்கு அருகில் நேற்று பெண்ணொருவருக்கு வன்முறையாக இடையூறு விளைவித்த இலங்கை பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டு குவைத்தின் பஹாஹுல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்..
குறித்த வர்த்தகத் தொகுதியின் காவலாளி குவைட் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு பொலிஸாருக்கு இலங்கை பிரஜையின் செயற்பாடு குறித்து அறிவித்துள்ளார்..