30.09.2012.By.Rajah.விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு கர்வம் என பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
பில்லா வெற்றிக்கு பின்பு அஜித் தனது 52வது படத்தில் மீண்டும் விஷ்ணுவர்த்தன்
இயக்கத்தில் நடிக்கிறார். அதற்குரிய படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானபோது படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது படத்தின் படப்பிடிப்புக்களில் விஷ்ணு மற்றும் அஜித் மும்முரமாக இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்புகளை இன்னும் 2 மாதங்களில் முடித்துவிடலாம் என கூறப்படுகிறது. எனவே அதற்குள் படத்திற்கு ஒரு நல்ல பெயர் வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கர்வம் என தலைப்பிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் இனிதான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 53வது படத்திற்கு வெற்றிகொண்டான் என தலைப்பு வைத்திருப்பதாக மற்றொரு தகவலும் கொலிவுட்டில் உலா வருகின்றன. |
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
அஜித்தின் 52வது படம் கர்வம்?
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்