30.09.2012.By.Rajah.ஜப்பானை கடும் சூறாவளி புயல்
தாக்கியதில் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
ஜப்பானின் டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை ஜிலாவத் என்ற புயல் 144 கிலோ
மீற்றர் வேகத்தில் தாக்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல் கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன. மின் கம்பிகள், தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த சூறைக் காற்று வீசி வருவதால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. |
முகப்பு |