30.09.2012.By.Rajah.சவுதி அரேபியாவின் தஹரான்
நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், பெண்கள் இருவர் திடீரென சண்டை போட்டுக் கொண்டதால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஹரான் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், பொருட்களை வாங்கி கொண்டிருந்த சில
பெண்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, பெரும் சண்டையாக மாறியது. ஆளாளுக்கு தலையைப் பிடித்தும், செருப்புகளை எடுத்து அடித்துக் கொண்டும், கையில் இருந்த பேக்குகளால் சரமாரியாக அடித்தும் சண்டை போட ஆரம்பித்தனர். இதனையடுத்து அங்கிருந்த பொலிஸார் ஓடி வந்தனர். வந்தவர்கள் அனைவரும் ஆண்கள். சவுதி நாட்டுச் சட்டப்படி ஆண்கள் பெண்களைத் தொடக் கூடாது. எனவே அவர்கள் சண்டையை விலக்கி விட முடியாமல் திகைத்து நின்றனர். இதையடுத்து பெண் பொலிஸாருக்குத் தகவல் போனது. ஆனால் அவர்கள் வருவதற்குள் சண்டை மேலும் உக்கிரமாகி விட்டது. மாலில் இருந்த கடைகளுக்குள் ஓடி ஓடி சண்டை போட்டனர் அந்தப் பெண்கள். இதனால் அங்கிருந்த பல பெண்கள் காயமடைந்தனர். அதன் பின்பு வந்த பெண் பொலிஸார், சண்டை போட்ட பெண்களை கடும் சிரமத்துக்கு மத்தியில் விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சண்டையால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது |
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
கட்டிப் புரண்டு சண்டை போட்ட பெண்கள்: போர்க்களமாக மாறிய ஷாப்பிங் மால்
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்