siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டாம் கட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 30பேர் இன்று நாடு திரும்பினர்

 

30.09.2012.By.Rajah.{காணொளி, புகைப்படங்கள்}இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களாக சென்றோரில் இரண்டாம் பிரிவினர் இன்று காலை சுயமாக இலங்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை ரேடியே ஒஸ்திரேலியா என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. நௌறு தீவுகளில் இருந்து 2 பேரும் கிறிஸ்மஸ் தீவுகளில் இருந்து 20 பேரும் விலாவூட் மற்றும் யொங்கா ஹில் ஆகிய இடங்களில் இருந்து 6 பேருமாக மொத்தம் 28 பேர் இன்று இலங்கைக்கு புறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
நௌறு தீவுகளுக்கு மாற்றப்படும் போது இலங்கை திரும்புவோரை பார்க்கும் போது அவர்கள் ஆட்கடத்தல்காரர்களால் பொய் வாக்குறுதி வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டமை புலனாகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
30 இலங்கையர்கள் ஆஸி'யிலிருந்து நாடு திரும்பினர்
சட்டவிரோத குடியேறிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 இலங்கையர்கள் இன்று மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் விசேட வானூர்தி அவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
அவர்களுடன் 60 அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரும் கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக எமது வானூர்தி தள செய்தியாளர்கள் தெரிவித்தார்..
இலங்கை திரும்பிய குடியேறிகள் பின்னர் விசாரணைகளுக்காக தேசிய ரகசிய தகவல் ஆய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் நவுரு தீவிற்கு செல்ல மறுத்தமையினாலேயே மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
இதனிடையே, அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டமையினால் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் எனக் கூறிக்கொண்டு வேறு நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா சென்றவர்களும் வந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடிய கவனத்துடன் செயற்படுவதாக குடிவரவு குடியகல்வு நிர்வாகி சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இன்று திருப்பியனுப்பப்பட்டவர்கள் குறித்து அவுஸ்திரேலியா அரசாங்கமும் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதில் குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் வெளியிட்டுள்ள கருத்தில், ஆட்கடத்தல் காரர்களால் தமது நாட்டுக்கு அழைத்துவரப்படுபவர்களுக்கு எந்த தருணத்திலும் வீசா வழங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு விசேட கவனமோ, வாழ்க்கை பாதுகாப்பு குறித்து திடீர் தீர்மானங்களோ, எடுக்கப்படமாட்டாது என்றும் கிறிஸ் போவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்கடத்தல் காரர்கள் அவுஸ்திரேலியாவில் நிலவும் தன்மை குறித்து போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பியனுப்பும் போது தேவையான வசதிகள் குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகளே தீர்மானிப்பார்கள் என்றும் குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்கையில், சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டு கேரளா கடற்பிராந்தியத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 14 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்க்ள சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 13 இளைஞர்களும், ஒரு பெண்ணும் அந்த குழுவில் உள்ளடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22

 
29.09.2012.