இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த
நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. தென் ஆசியாவின் சகல முக்கிய நிலைகளையும்தாக்கக் கூடிய வகையில்
இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அக்னி ரக ஏவுகணையே இவ்வாறு
நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, ஹம்பாந்தோட்டை
துறைமுகங்கள், கட்டுநாயக்க,மத்தள, ரத்மலானை விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம்,
புத்தளம் அனல்மின்நிலையம், களனிதிஸ்ஸ, கெரவல பிட்டிய மின்நிலையங்கள் போன்றவற்றை
இலக்குவைத்து இவ்வாறு ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்களை வழங்கிய இந்திய உளவுப்பிரிவின்
உயர் அதிகாரி அம்ரீட் அவுவாலியா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மிஸைல்டொட் கொம்
என்ற இணைய தளத்தை பராமரித்து வரும் கலிபோர்னியாவை மையமாகக் கொண்ட
அமெரிக்கநிறுவனமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்தி இந்தியா,
இலங்கையிடமிருந்து பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும்அதேவேளை, சீனா
முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதனையும் தடுக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக
தெரிவித்துள்ளது.
இலங்கையூடான சீனாவின் விநியோக வழிகளைதடுப்பதற்கு
இந்தியாவும், அமெரிக்காவும் இரகசிய திட்டம் தீட்டி வருவதாகக்
குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகராலய
முதலாம் நிலை செயலாளர் அனுராக் சிறிவட்சரா பாலியல் துஸ்பிரயோகசம்பவங்களுடன்
தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது