அட்டன் - பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தின் வீடொன்றில் பாதுகாப்பற்ற
முறையில் தனிமையில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று பிற்பகல்
மீட்டனர்.
ஆகாரமின்றி எட்டு வயது மற்றும் ஐந்து வயதான இரு சகோதரிகள் தமது பெற்றோர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பாக தோட்டத்தில் வசிக்கும் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமையவே பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர்.
இச்சிறுமிகளின் தாய் தாம் கொழும்புக்கு சென்று வருவதாக கூறி அவர்களை வீட்டில் தனிமையில் விட்டு சென்றதாகவும் தந்தை தொடர்பாக இவர்களுக்கு கூறத் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சிறுமிகள் இன்று அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதவானின் கட்டளைக்கு ஏற்ப மஸ்கெலிய சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இச்சிறுமிகளின் பெற்றோர் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.