
விஜய்,சங்கீதா தாலி எடுத்து கொடுக்க திருமணம் இனிதே நடந்தது. 51 சீர்வரிசைகளை திருமணமான தம்பதிகள் வரிசையாக பெற்றுக்கொண்டனர். மணமக்களை வாழ்த்திப் பேசிய விஜய் “ திருமணம் செய்துகொண்டு இங்கு அமர்ந்திருக்கும் மணமக்களை வாழ்த்த எனக்கு வயதில்லை. குடும்ப வாழ்க்கையை பற்றி கருத்து சொல்கிற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை.
வாழ்க்கை என்றால் சிறு சிறு துன்பங்கள் வரத்தான் செய்யும்.அதைக் கடந்து வாழ புரிதல் முக்கியம். எந்த சூழ்நிலையிலும் நம்பி வந்தவர்களை கைவிட்டுவிடாதீர்கள். எனக்கு என் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள நேரம் இருக்காது. சங்கீதா தான் அவர்களின் படிப்பு, உணவு என அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்” என்று கூறினார்.
மண்டபத்திற்குள் இருந்த ரசிகர்கள் துப்பாக்கி படத்தின் நிலை பற்றி கேட்ட போது “துப்பாக்கியில் 5 குண்டுகள் போட்டாச்சு. மீதி ஒரு குண்டு தான் இருக்கிறது. அதையும் லோட் செய்தபின் துப்பாக்கியை உங்களிடம் கொடுத்துவிடுவேன்” என்று கூறினார்.