
அதுவரை காலமும் தான் தான் அகதிகளின் பேச்சாளர் என்ற நிலையில் இருந்த அலெக்ஸ், இரவோடு இரவாக இந்தோனேசியாவில் இருந்து மர்மமாக மறைந்தார். அதன்பின் அவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்பதுபோன்ற விடையங்கள் தெரியாது அகதித் தமிழர்கள் குழம்பிப்போய் இருந்தனர். அகதிகளாக இருந்த தமிழர்கள், அலெக்ஸ் தங்களை சங்கடத்தில் மாட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும், இவரால் தான் எல்லாப் பிரச்சனைகளும் தலைதூக்கியதாகவும் முன்னர் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்திருந்தனர்.
தற்போது தாய்லாந்து நாட்டில், இவர் தலைதூக்கியுள்ளார் என அன் நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தான் இந்தோனேசியாவில் இருந்து எவ்வாறு தப்பினேன், நடந்தது என்ன என்று பக்கம் பக்கமாகக் கதைசொல்லியிருக்கிறார் அலெக்ஸ். தமிழ் நாட்டில் உள்ள பாதிரியார் காஸ்பர் புலுடா விடுவதுபோல இவர் தனது அனுபவங்கள் என்றுகூறி பல செய்திகளை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்