ஜெர்மனிக்கு வந்து தஞ்சம் கோரி, அக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பித்த குடியேறிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவேண்டும் என்று ஜெர்மனியின் மாகாணமான, பவேரியாவின் உள்துறை அமைச்சர், ஜோச்சிம் ஹெர்மான் கூறியிருக்கிறார்.
தஞ்சம் கோரிகளின் சொந்த நாடுகளில் போர் நடந்து கொண்டிருந்தால் கூட , அவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று
அவர் கூறினார்.
தனது பவேரியா மாகாணத்தில் நடந்த பல இஸ்லாமியவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பேசிய ஹெர்மன், தேவைப்பட்டால், இதைச் செய்ய ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மாற்ற வேண்டும் என்றார். இந்த சட்டங்கள் ஒரு சில அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதிலிருந்து தடுக்கின்றன.
பவேரியா மாகாணத்தின் பிரதமரும், ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்க்கலின் நீண்ட கால விமர்சகருமான, ஹொர்ஸ்ட் சீஹோஃபர் , ஜெர்மனியின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் என்று
கூறியுள்ளார்.
ஜெர்மனியில் கடந்த வாரம் நடந்த நான்கு தாக்குதல் சம்பவங்களில் மூன்று தஞ்சம் கோரிகளால் நிகழ்த்தப்பட்டவை என்பது
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக