காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக ஐ.நா.விற்கு எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் காமண்டர் பர்கான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள்
நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி
வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக ஐ.நா.விற்கு எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளார் பான் கி மூன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கோரோ பெஸ்ஸோ, இஸ்லாமிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இயட் பின் அமின் மதானி மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா. உயர் ஆணையர் ஜியத் ராத் அல் ஹூசைன் ஆகியோருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கடிதம்
எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடிதத்தில் காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் காமண்டர் பர்கானை பிரதமர் நவாஸ் ஷெரீப் தியாகியாக அறிவித்துள்ளார். மேலும் ஜூலை 19-ம் தேதி கருப்பு தினமாக கருதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக