ஆஸ்திரேலியா நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் 1987–ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2–ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை என்னும் கீழ்சபையின் 150 இடங்களுக்கும், செனட் சபை என்றழைக்கப்படுகிற மேல்–சபையின் 76 இடங்களுக்கும் கடந்த 2-ம் தேதிதேர்தல் நடந்தது.
ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா’ என்கிற அளவில் கடுமையான போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மாலையிலேயே ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே முடிவுகள் இழுபறியாக ஊசலாட்டத்துடனே வெளியாகின.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆஸ்திரேலியாவில் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மால்கம்டர்ன்புல் அறிவித்து இருந்தார். அதற்கு பொது மக்களிடம் ஆதரவு இருந்தது. எனவே, இக்கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப, இன்று நடைபெற்ற இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 150 இடங்களை கொண்ட ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் 76 இடங்களை பிடிக்கும் கட்சிதான் அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி தற்போது 74 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் இரு இடங்களில் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி வெற்றி பெறாவிட்டாலும், ஆளும்கட்சிக்கு ஆதரவான மூன்று எம்.பி.க்கள் துணையுடன் ஆஸ்திரேலியாவில் மால்கோம் டர்ன்புல் தலைமையிலான மந்திரிசபை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி விட்டது.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 66 இடங்களை பிடித்துள்ள நிலையில் லிபரல் கட்சியின் வெற்றியை ஏற்றுக் கொண்டுள்ள தொழிற்கட்சி தலைவர் பில் ஷார்ட்டன் ஆஸ்திரேலியாவின் எதிர்கால பிரதமர் மால்கோம் டர்ன்புல்-லை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக