Wednesday31October2012.By.By.Rajah..சீனாவில் தேசிய நுழைவு தேர்வு முடிவதற்கு முன்னர், பெல் அடித்த ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி, தேசிய அளவில் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வு நடந்தது. பல்வேறு மையங்களில் மாணவ, மாணவிகள் மும்முரமாக தேர்வு எழுதி கொண்டிருந்தனர்.
ஹூனான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு 1,050 மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது தேர்வு முடிந்து விட்டதற்கான மணி ஒலித்தது. மாணவர்கள் விடைத்தாள்களை கொடுத்துவிட்டு மையத்தில் இருந்து வெளியில் வந்தனர். வெளியில் இருந்த பெற்றோர் பலர் பரபரப்பு அடைந்தனர்.
அப்போதுதான், தேர்வு முடிய இன்னும் 5 நிமிடம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளியிலும், தேர்வு துறை அலுவலகம் முன்பும் ஏராளமான பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Ôதேர்வு முடிவதற்கு பெல் அடித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்Õ என்று வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, ஜியாவோ யுலாங் (54) என்ற ஊழியர் 5 நிமிடத்துக்கு முன்னரே தவறுதலாக மணி அடித்து விட்டதை ஒப்புக் கொண்டார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. எனினும், தண்டனையை நிறைவேற்றுவதற்கு தற்காலிகமாக தடை விதித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது
0 comments:
கருத்துரையிடுக