செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
சர்வதேச விண்வெளி ஆய்வு
மையத்திலிருந்து பொருட்களை சுமந்தபடி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி உள்ளது டிராகன்
விண்கலம்.
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, விண்வெளியில்
மிதக்கும் சர்வதேச ஆய்வு மையத்துக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் பணியை
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்தது. சிஆர்எஸ்-1 என்ற இத்திட்டத்தில் “டிராகன்” எனப் பெயரிடப்பட்ட விண்கலம் 450 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி விண்வெளி நிலையத்துக்குச் சென்றது. அங்கு பொருள்களைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து மாதிரிகள், ஆய்வு முடிவுகள், வன்பொருள்கள் உள்ளிட்ட 758 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி வெற்றிகரமாகத் திரும்பியது டிராகன். பசிபிக் கடலில் பாராசூட் உதவியுடன் இறங்கிய இந்த ஆளில்லா விண்கலம் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது. |
செவ்வாய், 30 அக்டோபர், 2012
வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம்
செவ்வாய், அக்டோபர் 30, 2012
செய்திகள்