Tuesday 30 October 2012.By.Rajah.எதிர்பார்க்கப்பட்டதைப் போல நேற்றைய தினம் இலங்கையை சூறாவளி எதுவும் தாக்கவில்லை, எனினும், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சூறாவளி இலங்கையை ஊடறுத்து செல்லலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தற்போது முல்லைத்தீவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாழமுக்க நிலையில், இன்று பிற்பகலில் காங்கேசன் துறை ஊடாக இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது.
இதனால் யாழ்ப்பாணத்தில் சிறிய அளவிலான சூறாவளி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்ற வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
அதேநேரம் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.