BY.rajah,28.08.2012
அமெரிக்காவிலுள்ள சுவிஸ் வங்கிகளான
கிரெடிட் சுவிஸ் மற்றும் UBSல் பணிபுரியும் வங்கிப் பணியாளர்கள் ஒபாமாவை விட மிட்
ரோம்னிக்கு அதிகளவில் தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கின்றது. இந்நிலையில் இரு வேட்பாளர்களின் பணப்பெட்டியும் தேர்தல் நிதியால் நிரம்பி வழிகின்றது. அமெரிக்க வரலாற்றிலேயே இந்த 2012 ஆண்டு தேர்தல் தான் அதிக செலவில் நடத்தப்படும் முதல் தேர்தலாக கருதப்படுகின்றது. யூலை மாதம் ஒபாமாவை விட அவரது போட்டியாளர் மிட் ரோம்னிக்கு அதிகம் நிதி குவிந்ததாகத் தெரிகிறது. ஆனால் ஒபாமா தனக்கு இதுவரை 348 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மிட் ரோம்னிக்கு 193 மில்லியன் டொலர் சேர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களாக வங்கி உயர் அதிகாரிகள் அமெரிக்க ஜனாதிபதி போட்டியாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குவதில் மிகவும் தாராளமாக இருக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் வர்த்தக உலகில் 2012ம் ஆண்டிலிருந்து பெரு நிதி பெறுவதில் சில புதிய கட்டுப்பாடுகளை வெள்ளை மாளிகை கொண்டுவந்துள்ளது |