siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

இலங்கைக்கு சொந்தமான கப்பல் டேர்பனில் தடுத்து வைப்பு

BYrajah.
 
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான லங்கா மஹாபொல கப்பல் இன்னும் டேர்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
இந்த கப்பல் டேர்பனில் நங்கூரமிட்டதற்கான கட்டணமான 81 ஆயிரம் டொலர்கள் செலுத்தப்படவில்லை என்பதாலும், உரிய தரம் பேணப்படாமையாலும், கடந்த மே மாதம் 17ம் திகதி டேர்பன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டது.
அதன் மாலுமிகள் கடந்த ஜுன் மாதம் நாடு திரும்பினர். எனினும் இந்த கப்பல் இன்னும் மீட்கப்படாது உள்ளது.
இதற்கிடையில் அரசாங்கத்தினால் இந்த கப்பல் தன்சானியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரையில் இலங்கையின் கொடி பறக்கவிடப்பட்டிருந்த இந்த கப்பலில், தற்போது தன்சானியாவின் கொடி பறக்கப்படவிப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் இந்த கப்பல் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலான அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிடவில்லை.
இந்த கப்பலை கொழும்பில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று பயன்படுத்தி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஜனாதிபதியின் முக்கிய அதிகாரி ஒருவரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது
.