
படத்தின் முதல் பாடலான கொண்டாடும் மனசு ஹீரோ சசிகுமாரின் அறிமுகப்பாடல். இதில் நடன அசைவுகள் எல்லாமே ரஜினி ஸ்டைலில் இருந்ததை பார்த்தவர்கள் உணரமுடியும். இதுபற்றி சசிகுமாரிடம் கேட்டபோது, “ இந்த படத்துல நான் ரஜினி சார ஃபாலோ பண்ணி நடிச்சிருக்கேன். படத்துல என்னோட முதல் காட்சியே ‘இவர் தான் சுந்தரபாண்டியன். ரஜினி ரசிகர்’னு சொல்றா மாதிரி தான் இருக்கும். முதல் பாடலும் அப்படித்தான் ரஜினி சார் ஸ்டைலில் மூவ்மெண்ட் போட்டிருக்கோம்.
இதுவரைக்கும் நான் நடிச்ச படத்துல என்ன பாத்து எல்லாரும் பயந்தாங்க. என்னடா இவன் எப்பவுமே கத்தியோட வந்து கொலை செய்யுறதே வேலையா இருக்கான்னு. ஆனா இந்த படத்துல நட்பு,காதல், ஆக்ஷன், குடும்பம் என எல்லாம் இருக்கு.
எப்போதும் படத்தில் நீங்க மத்தவங்க காதலுக்கு தான் உதவி செய்வீங்க. ஆனா, இந்த படத்துல நீங்களே காதலிக்கிறீங்களே? என்று கேட்டதற்கு, ஏன் நான் காதலிக்கக் கூடாதா ஒரு பொண்ண வெரட்டி வெரட்டி இந்த படத்தில் காதலிக்கிறேன்” என்றார். சுந்தரபாண்டியன் அடுத்த மாதத்தில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது