B.Yrajah.
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, |
அமெரிக்காவில்
கலிபோர்னியா மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 100 சிறு
நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கலிபோர்னியாவின் தென் கிழக்கு பகுதியில் எல் சென்ட்ரோ என்ற இடத்தின் வடக்கு
பகுதியில், உள்ளூர் நேரப்படி கடந்த 26ஆம் திகதி காலை 10.02 மணிக்கு முதல் நில
நடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 3.9 என பதிவானது. இதன்பின் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் 30 நில அதிர்வுகள் ரிக்டர் அளவில் குறைந்தபட்சம் 3.5 என்ற அளவில் பதிவாகின. மிக அதிகபட்சமாக பராவெலி நகரின் வடமேற்கு பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநிலக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவானது. இந்த தொடர் நில அதிர்வுகளால் மக்கள் பெரிதும் பீதியடைந்தனர். நடமாடும் வீடுகளில் வசித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உணவகங்கள், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்து சேதம் அடைந்தன |