கொலிவுட்டில் ஹார்மோன் மூவி மேக்கர்ஸ், மானவ் புரடக்சன் இணைந்து தயாரித்துள்ள படம் உயிர்மொழி. |
இப்படத்தில் மானவ், ராஜீவ், சர்தாஜ், கீர்த்தி, சாம்ஸ், சசி, பாபி ஆண்டனி
மற்றும் பலர் நடித்துள்ளார்கள். உயிர்மொழி படம் குறித்து இயக்குனர் ராஜா கூறுகையில், பல சுவாரஸ்யமான காட்சிகள், சம்பவங்களை சேர்த்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நிச்சயம் தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். காதல், பாசம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, அதிர்ச்சி என்று எல்லாம் கலந்த அழகான கலகலப்பான படமாக உயிர்மொழி ரசிகர்களை கவரும். திரைக்கதையுடன் பின்னப்பட்டுள்ள டி.என்.ஏ அம்சம் படத்துக்கு கூடுதல் பலமாக நிற்கும். சென்னை, கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அனிமேஷன் அசத்தலும் உண்டு. stop motion, Limbo frame முறையிலும் காட்சிகளை எடுத்துள்ளோம். புதுமையான தொழில்நுட்பத்தில் நீளமான காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளோம் என்றும் பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். |
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012
புதிய தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட உயிர்மொழி
செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012
தகவல்கள்