siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 19 ஜூலை, 2014

வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

ஜப்பானில் குழந்தைளின் வறுமை நிலை குறித்து எடுக்கப்பட்ட நலத்துறை அமைச்சகத்தின் கணக்கீடு இந்த ஆண்டு அதிக பட்ச உயரத்தைத் தொட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டைவிட இப்போது 16.3 சதவிகிதம் அதிகரித்துக் காணப்படும் இந்த நிலையானது கணக்கீடு தொடங்கப்பட்ட முப்பதாண்டுகளில் இதுவரை இல்லாத உயர்ந்தபட்ச சதவிகிதம் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 34 உறுப்பினர் நாடுகளில் ஜப்பானிலும் குழந்தை வறுமை அதிக அளவில் இருப்பதாக இந்தக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ, இஸ்ரேல், சிலி, அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜப்பான் இதில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது
ஒரு நபருக்கான ஆண்டு நிகர வருமானம் 1.22 மில்லியன் யென்னுக்குக் குறைவாக (12000 அமெரிக்க டாலர்) உள்ள குடும்பங்களில் வளரும் குழந்தைகளே இந்தக் கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒரு பெற்றோராக இருக்கும் குடும்பங்களில் பாதிக்கு மேல் வறுமை நிலைக்குக் கீழிருப்பதுவும், பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில் மூன்றில் இரண்டு சதவிகிதத்தினர் தங்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கருதுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
மக்களின் ஊதிய விகிதங்களில் தென்பட்ட இந்த மிகப்பெரிய இடைவெளி நீண்டகாலமாக சமத்துவ சமுதாயத்தைக் கொண்டுள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் ஜப்பானின் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த இருபதாண்டுகளாக காணப்பட்டுவரும் நலிவுற்ற பொருளாதார நிலை பெண்கள் குறைந்த அளவு ஊதியம் பெறும் ஒப்பந்த நிலையை இங்கு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. குடும்ப வருமானக் குறைவே குழந்தைகளின் வறுமை சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது என்று நலத்துறை அமைச்சகம் குறிப்பிடுகின்றது.
இந்த நிலை ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று கூறும் மசாடோ ஹிராயு என்ற குழந்தை வறுமை ஒழிப்பு ஆர்வலர் இந்தப் பிரச்சினையைக் கையாளுவதில் செயலாற்ற நிலையை உடைய அரசினால் ஏற்படும் இயற்கையான முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
 
மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக