அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஜீ-20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாத்திமிர் புத்தின் கலந்து கொள்வாரா என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்வது தொடர்பில் பொறுத்திருந்து தான் தீர்மானிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அபொட் தெரிவித்துள்ளார்.
மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்திற்கு நேர்ந்த கதியைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அரசாங்கம் ரஷ்யத் தலைவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.
நடுவானில் பறந்து கொண்டிருந்த எம்எச்-17 விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரேனின் கிழக்குப் பகுதியில் வீழ்ந்து நொருங்கியது. இந்த அசம்பாவிதத்தில், 28 அவுஸ்திரேலியர்கள் அடங்கலாக, விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகியிருந்தார்கள்.
ரஷ்யாவின் ஆதரவுடைய கிளர்ச்சியாளர்கள் தான் தாக்குதலை நடத்தியதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
இது பற்றிய சர்வதேச விசாரணைகளுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அரசாங்கம் கூறகிறது.
ரஷ்யா ஒத்துழைக்காவிட்டால், புத்தினை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன் தெரிவித்தார்.
ஆனால், ரஷ்யா எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க விரும்புவதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியா தன்மானமுள்ள நாடாகும். அத்துடன், அவுஸ்திரேலியாவை நாடும் விருந்தாளிகள் அந்நாட்டின் மீது நல்லெண்ணம் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
0 comments:
கருத்துரையிடுக