27.07.2012.இங்கிலாந்தைச் சேர்ந்த பேட்ரிக்
சிலோன்(வயது 60) என்பவர் 3 மாத இடைவெளியில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத்
தாத்தாவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
பேட்ரிக் சிலோன் கடந்த 2007ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் 2-வது திருமணம் செய்த மனைவிக்கு கடந்த மார்ச் மாதம் குழந்தை பிறந்தது. 60 வயதில் தாம் தந்தையானது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார் பேட்ரிக். இந்நிலையில் ஜூன் மாதத்தில் பேட்ரிக்கு மேலும் 2 மகிழ்ச்சியான தருணங்கள் காத்திருந்தன. அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகளின் மகளுக்கு குழந்தை பிறந்தது. அதாவது தந்தையான சந்தோஷத்தில் இருந்த பேட்ரிக் இப்பொழுது கொள்ளுத் தாத்தாவானார். அடுத்த 12 நாட்கள் தான், இன்னொரு மகள் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க தாத்தாவாகி இருக்கிறார் பேட்ரிக். இப்பொழுது மொத்தம் பேட்ரிக்குக்கு 6 பேரக் குழந்தைகள். இருந்தாலும் 60 வயதில் பிறந்த ஈதன் என்ற குழந்தை தான் தமக்கு பொக்கிஷம் என்றும், ஒவ்வொரு நாளும் அந்த குழந்தையின் புன்னகையில் வாழ்க்கையையே மறந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் பேட்ரிக். |
வெள்ளி, 27 ஜூலை, 2012
3 மாதங்களில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத் தாத்தாவாக அவதாரமெடுத்த நபர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக