siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூலை, 2012

இவருக்கும் கடையில் பொருள் வாங்க ஆசை வந்துவிட்டது போல!

இவருக்கும் கடையில் பொருள் வாங்க ஆசை வந்துவிட்டது போல!

, 27 July 2012,
சில நேரங்களில் அழைக்காத நபர் திடீரென்று வந்து அதிர்ச்சியை தருவார்கள். அதுபோல அமெரிக்காவில் கடைக்குள் கரடி நுழைந்து அங்கிருந்தவர்களை அலற வைத்தது.
பென்சில்வானியா மாகாணத்தில் பீத்ஸ்பெர்க் என்ற இடத்தில் உள்ள கடையில் ஏராளமான வாடிக்கையாளர் பொருட்களை வாங்க குவிந்திருந்தனர். அந்த நேரத்தில் 125 பவுண்ட் எடையுள்ள பெண் கரடி ஒன்று கடைக்குள் நுழைந்தது.
கரடி நிற்பதை கண்டு சிலர் அலறினார்கள். உடனே கடைக்குள் இருந்தவர்கள் வேறு வாசல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் கரடி கடையில் பல பகுதிக்குச் சென்று உலாவந்தது. ஆனாலும் எவ்வித சேதத்தையும் அது ஏற்படுத்தவில்லை.
உடனே வனவிலங்கு ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசியை போட்டு கரடியை பிடித்தார்கள். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.






0 comments:

கருத்துரையிடுக